இசை நிகழ்ச்சிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் சிலர் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து, உண்மையான நோக்கத்திற்காக வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கூட அவுஸ்திரேலியா வீசா கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், பல்வேறு இசைக் கச்சேரிகளை நடத்துவது என்ற போர்வையில் சில தரப்பினர் அவுஸ்திரேலிய விசாவைப் பெறுவதற்கு பல்வேறு யுக்திகளை மேற்கொள்வதாகும்.
ஏற்பாடு செய்யப்பட்ட சில நாட்களிலேயே இசைக் கச்சேரிகள் ரத்து செய்யப்படுவது இதன் முக்கிய அம்சமாகும்.
இசை நிகழ்ச்சிகளுக்கு விசா பெறும் இசைக் கலைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு காணாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான விடயங்களினால் உண்மையான நோக்கங்களுக்காக அவுஸ்திரேலியாவிற்கு வரும் மாணவர்களுக்கும் அவுஸ்திரேலியாவிற்கு பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வரும் இலங்கைப் பெற்றோருக்கும் விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான தந்திரங்கள் இலங்கையின் இமேஜை மேலும் சேதப்படுத்தும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் உண்மையாகவே தமது செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கையின் இசைக் கலைஞர்களுக்கு கடுமையான அநீதிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளும் இசைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கைக்கு டொலர் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்கும் இசைக்கலைஞர்கள் ஊக்கம் குன்றி, நாட்டுக்கு உரிய வருமானம் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.