Newsஅமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையில் மோதல் - மேலும் ஒரு மர்ம பொருளை சுட்டு...

அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையில் மோதல் – மேலும் ஒரு மர்ம பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

-

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீன உளவு பலூன் பறப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் 4-ம் திகதி போர் விமானம் மூலம் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 10-ம் திகதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்த அமெரிக்க இராணுவம் அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. 

இதை தொடர்ந்து, 11-ம் திகதி அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் யூகோன் நகரின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானத்தால் அது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஹூரான் ஏரிக்கு மேல் 20 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த இராணுவத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். அதன் பேரில் எப்-16 ரக போர் விமானம் ஏவுகணையை வீசி அந்த மர்ம பொருளை வீழ்த்தியது. 

அமெரிக்க வான்பரப்பில் அடுத்தடுத்து மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும், தொடர்ந்து அவை சுட்டுவீழ்த்தப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான ரிலாவ் நகரில் கடலுக்கு மேலே மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு ஆபத்து இல்லாமல் அதை சுட்டு வீழ்த்த தயாராகி வருவதாகவும் சீன கடற்படை தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...