இந்த ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் வாழ்க்கைச் செலவு முக்கிய தலைப்பாக மாறியுள்ளது.
பணவீக்கம் – வீட்டு விலைகள் – வட்டி விகிதங்கள் மற்றும் ஊதியம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடான சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தற்போதைய நிலைப்பாடு அரசு ஊழியர் சம்பளத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மதிப்பை நீக்குவதாகும்.
ஆனால் இது வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதே ஆளும் லிபரல் கூட்டணியின் நிலைப்பாடு.
நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தல் அடுத்த மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது.