NewsBBC அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

BBC அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

-

டெல்லியில் உள்ள BBC செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை சில நாட்களுக்கு முன்பு BBC நிறுவனம் வெளியிட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், BBC நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை BBC உருவாக்கியது.

நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 17-ஆம் திகதியும் இரண்டாம் பாகம் 24-ஆம் திகதியும் வெளியானது.

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த மத்திய அரசு, இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியது.

மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூ-டியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளுக்கு தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு கடந்த 21-ஆம் திகதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...