ஆஸ்திரேலியாவின் முக்கிய மருத்துவ சங்கமான ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், எலக்ட்ரானிக் சிகரெட் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தனிநபர்கள் இறக்குமதி செய்யக்கூடிய நிகோடின் அளவு மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் சிறார்களை எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தற்போது எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துபவர்கள் 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களில் கணிசமானவர்கள் சிறார்கள் மற்றும் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.