Cinemaஇளம் நடிகை மீது காதலில் விழுந்த பாரதிராஜா!

இளம் நடிகை மீது காதலில் விழுந்த பாரதிராஜா!

-

திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார்.

‘வாத்தி’ திரைப்படம் பெப்ரவரி 17ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பேசியதாவது:-

வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.காலில் விழுவேன். ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதன். சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது.

கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டோனோ என தோன்றுகிறது.

அவரை காதலிக்காமல் இருக்கவில்லை. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என கூறினார்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...