Newsஅமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

அமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

-

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டின் வான்பரப்பில் அடுத்தடுத்து 2 மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டன. 

அதேபோல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்பரப்பில் மர்ம பலூன் பறந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அந்த நாட்டின் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளியில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை ரேடார் அமைப்பு கண்டறிந்தது. 

அதனை தொடர்ந்து உடனடியாக 2 போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் விமானங்கள் சென்றபோது அந்த இடத்தில் மர்ம பலூன் எதுவும் இல்லை. 

ரேடாரில் இருந்தும் அது மறைந்துவிட்டது. எனவே ருமேனிய வான்வெளிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என கூறப்பட்டது. 

அதேபோல் ருமேனியாவின் அண்டை நாடான மால்டோவாவும் தங்கள் வான்பரப்பில் மர்ம பலூன் தென்பட்டதாக தெரிவித்தது. 

அதுமட்டும் இன்றி வானில் மர்ம பலூன் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்டோவா தனது வான்வெளி முழுவதையும் தற்காலிகமாக மூடியது. 

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக இயக்கப்பட்டன. பல விமானங்கள் ருமேனியாவுக்கு மாற்றிவிடப்பட்டன. 

இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த மர்ம பலூன்கள் எங்கிருந்து வந்தன என்று இரு நாடுகளும் தெரிவிக்கவில்லை.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...