Cinemaயோகி பாபுவுக்கு கிரிக்கெட் பெட் பரிசளித்த தோனி!

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பெட் பரிசளித்த தோனி!

-

நடிகர் யோகி பாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி கிரிக்கெட்  பெட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். நகைச்சுவை, நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு விருப்பமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன்பின், அவர் நாயகனாக நடித்த ‘பொம்மை நாயகி’படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘தோனியின் கைகளிலிருந்து நேரடியாக வந்துள்ளது. அவர் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியது. மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமாவின் நினைவுகளை என்றும் ரசிக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தோனி அந்த பேட்டில் ‘வாழ்த்துக்கள் யோகிபாபு’ என கையொப்பமிட்டு அனுப்பியிருக்கார்!

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...