Newsமகா ராணி எலிசபெத் அணிந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில்...

மகா ராணி எலிசபெத் அணிந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில் வெளியான தகவல்

-

மறைந்த இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது. 

இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது. 

இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே கூறி விட்டது. இதையொட்டிய சர்ச்சை இன்னும் தொடர்கிறது. 

இந்த வைரம் பதித்த கிரீடத்தை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு அந்த நாட்டின் புதிய ராணியாக மகுடம் சூட்டப்போகும் கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அப்படி இல்லை. மே மாதம் 6-ம் திகதி கணவர் மன்னர் மூன்றாம் சார்லசுடன் மகுடம் சூடப்போகும் ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்த கிரீடத்தைத்தான் கமிலா தேர்ந்தெடுத்துள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில் கோஹினூர் வைரம் கிடையாது. அதே போன்ற வேறொரு வைரம்தான் அதில் பதிக்கப்பட்டுள்ளது.

ராணி கமிலாவின் தலையை அலங்கரிப்பதற்காக அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவர் கோட்டை கண்காட்சியில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

சமீபத்திய வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை புதிய ராணி ஒருவர் மகுடம் சூட்டுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. 

முதலில் மன்னர் சார்லஸின் பாட்டியின் கிரீடத்தைத்தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என ஊகங்கள் எழுந்தன. 

ஆனால் கடைசியில் ராணி மேரியின் கிரீடத்தை ராணி கமிலா பார்க்கர் தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...