Sportsபோர்டர் கவாஸ்கர் தொடர் : கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்...

போர்டர் கவாஸ்கர் தொடர் : கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின் – ஜடேஜா!

-

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (17) ஆரம்பமாகியது.

இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த அந்த அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை அவுஸ்திரேலிய அணி பறிகொடுத்தது. இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். 

இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை அஸ்வின் பிடித்தார். 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். 

இவர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்திய கவாஜாவை ஜடேஜா வெளியேற்றினார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் பந்து வீச்சில் 250 விக்கெட்டும் பேட்டிங்கில் 2500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். 

இந்தியாவின் கபில் தேவ் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார். இவர் 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது இடத்தில் இம்ரான் கான் (64 போட்டிகள்) உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Power bank மாடல்கள்

பல்வேறு Power Bankகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து எரியக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நுகர்வோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. Amazon, eBay மற்றும் Anker...

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்கா நீச்சல் தளத்தில் விழுந்த குழந்தை

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு சிறு குழந்தையை அவசர சேவைகள் மீட்டுள்ளன. பிரபலமான Dales Gorge நீச்சல் தளத்தில் சிறுவன்...

45 வயது நபரை மணந்த 6 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு வயது சிறுமியை 45 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணை அவளது தந்தை...