Night Shift தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
சரியான தூக்கமின்மையும், மோசமான வாழ்க்கை முறையும் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது, உலகம் முழுவதும் 25 முதல் 30 சதவீத பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு Night Shift வேலை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் – கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேவைகள் – துப்புரவு உள்ளிட்ட சேவைகள் அவர்களில் முக்கியமானவர்கள்.
அதிக நேரம் Night Shift-களில் பணிபுரிவது வயதான காலத்தில் அதிக நோய்களை ஏற்படுத்துகிறது என்பது மேலும் அறியப்பட்டுள்ளது.