இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள RMIT பல்கலைக்கழகத்திற்கும் இடையில் முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இளநிலை விரிவுரையாளர்களுக்கு RMIT பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 04 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
அதன்படி 31 பேர் பிஎச்டி பட்டப்படிப்பு படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RMIT பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அந்த வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.