Newsதுருக்கி நாட்டின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

துருக்கி நாட்டின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

-

துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

துருக்கி நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது.

அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மேலும், அடுத்த சில நாட்களுக்கு நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் பாதிப்பு மோசமாக இருந்தது.

முதல் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இஸ்தான்புல் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இருந்தாலும் கூட அங்கு போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி கட்டிடங்கள் கட்டப்படவில்லை. 

இதன் காரணமாக முதல் நிலநடுக்கத்திலும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களிலும் கட்டிடங்கள் முழுமையாகச் சரிந்தன..

இதில் ஈடுபாடுகளில் பலரும் சிக்கிக் கொண்டனர். இதன் காரணமாகத் துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் கூட பாதிப்புகள் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் அங்குள்ள மக்களுக்கு உதவ மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆன போதிலும், இப்போதும் உயிருடன் சிலரை மீட்பது மீட்புப் படையினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இதுவரை நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது. 

மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவரும்.இது தவிரப் பல ஆயிரம் பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிலநடுக்கமாகக் கருதப்படும் இதுவே துருக்கி நாட்டை ஒரு வழி செய்துவிட்டது. ஆனால், நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவது இல்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

2 கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல நகரில் 2030களில் மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்தான்புல் துருக்கியின் முக்கிய பால்டைன் கொட்டில் அமைந்துள்ளதே இதன் முக்கிய காரணமாகும்.

முன்னதாக 1999இல் நகரின் கிழக்குப் புறநகரில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் அப்போதே 17,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 

அதன் பிறகு மக்கள் தொகை இரு மடங்கு அதிகரித்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பும் அதற்கேற்ப அதிகரித்துள்ளது. இதேபோல மக்கள் தொகை அதிகரித்தால் வரும் நாட்களில் பூகம்பம் ஏற்படும்போது உயிரிழப்புகள் கிட்டதட்ட இரட்டிப்பாகும். 

தரமற்ற தரமற்ற கட்டிடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக மாற்றுவதன் மூலம் வரும் காலத்தில் ஏற்படும் பேரழிவைத் தடுக்க முடியும் என்று நகர்ப்புற கட்டுமான வல்லுநர் முராத் குணே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இஸ்தான்புல்லில் காலியான பல இடங்கள் உள்ளன. அங்கு வலிமையான நிலநடுக்கங்களைத் தடுக்கும் வகையிலான கட்டிடங்கள் கட்ட முடியும்.

வரும் காலத்தில் இஸ்தான்புல்லில் 7.5 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நிலநடுக்கம் பல ஆயிரம் பேரைக் கொல்லும் ஆபத்து உள்ளது. மேலும், நகரில் இருக்கும் 50,000 முதல் 2 லட்சம் கட்டிடங்கள் பலவீனமாக உள்ளன. அவை அப்படியே இடிந்து விழும் ஆபத்துகளும் உள்ளன.

பழங்கால கட்டிடங்கள் சிறிய நிலநடுக்கத்திற்கே இடிந்து விழும் ஆபத்து உள்ளதால் அங்குள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்’ என்றார்.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலில் உயிர் இழந்த Matilda

Bondi கடற்கரையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில், 10 வயது மாடில்டா குறிப்பிட்ட விவாதத்திற்குரிய பொருளாக இருந்துள்ளார். இந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் தனது தங்கையுடன் கலந்து கொண்ட...

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

Bondi கடற்கரை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Bondi கடற்கரையில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதினாறாக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...