நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்த $4,000 சிறப்பு கொடுப்பனவாக வழங்க முடிவு செய்துள்ளது.
அவர்களின் வருடாந்த சம்பளம் சுமார் 120,000 டொலர்களாக அதிகரிக்கும் என மாநில கல்வி அமைச்சர் சாரா மிட்செல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக நியூ சவுத் வேல்ஸ் அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்துவது அவர்களின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
இருப்பினும், இந்த திட்டங்கள் அனைத்தும் தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்டவை என்று நியூ சவுத் வேல்ஸ் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாத பிரேரணைகள் ஏன் திடீரென நடைமுறைப்படுத்தப்படுகின்றன என அவர்கள் மேலும் கேட்கின்றனர்.