Breaking Newsதுரத்தும் துயரம் - துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

துரத்தும் துயரம் – துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

-

துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது.

அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்.. பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அன்று மட்டும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

அதன் பின்னரும் கூட பல நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இதன் காரணமாக அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பலரும் ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நிலநடுக்கம் காரணமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இப்போது துருக்கியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் இரண்டு கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...