Newsஇருளில் மூழ்கியது கியூபா - பொதுமக்கள் பெரும் அவதி

இருளில் மூழ்கியது கியூபா – பொதுமக்கள் பெரும் அவதி

-

கரிபீயன் தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. 

இதனால் அந்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் ஹவானாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் மடான்சாஸ் மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

இது மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 11 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. 

மின் வினியோகம் படிப்படியாக மீட்டமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 13-ம் திகதி கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ மின் இணைப்புகளை சேதப்படுத்தியதால் நாட்டின் அதிகமான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுக்கும் பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்

பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Alan Jones மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பத்திரிகையாளருக்கு எதிரான ஆதாரங்களில் சில குற்றச்சாட்டுகளில் முரண்பாடான அறிக்கைகள்...

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...