Newsசிரிய நிலநடுக்க இடிபாடுகளில் பிறந்த குழந்தையை தத்தெடுத்த உறவினர்கள்

சிரிய நிலநடுக்க இடிபாடுகளில் பிறந்த குழந்தையை தத்தெடுத்த உறவினர்கள்

-

துருக்கி-சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. நிலநடுக்க பலி எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது.

வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்துக்கு இடையே பிறந்த பெண் குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

இட்லிப் மாகாணம் ஜின்டாய்ரிசில் அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்தார். பின்னர் நிலநடுக்கத்தால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் குழந்தையின் தந்தை மற்றும் 4 சகோதர, சகோதரிகள் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலகம் முழுவதும் பலர் விரும்பினர்.

இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையை உறவினர்கள் தத்தெடுத்தனர். குழந்தையின் தந்தை வழி அத்தை ஹலா, மாமா கலீல்-அல் சவாதி ஆகியோர் தத்தெடுத்துள்ளனர். குழந்தைக்கு அதனுடைய தாயின் பெயரான அப்ரா என்று பெயரிட்டனர்.

டி.என்.ஏ. சோதனை மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைக்கு பிறகு குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Latest news

வாக்காளர்களால் மிகவும் விரும்பப்படும் மாநிலப் பிரதமராக ஜான் பெசுட்டோ

விக்டோரியா மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுட்டோ, வாக்காளர்களால் மிகவும் விரும்பப்படும் மாநிலப் பிரதமர் வேட்பாளராக மாறியுள்ளார். தி ஏஜ் செய்தி இணையதளத்திற்காக...

கோடை காலம் நெருங்கி வருவதால் பாம்புகள் பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை மற்றும் இனவிருத்தி காலம் காரணமாக பாம்புகள் வெளியேறி வருவதாக விக்டோரியா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இனி முக்கிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட...

கழிப்பறையில் அதிக நேரத்தை வீணடிக்கும் நபர்களே உஷார்…!

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து நேரத்தை செலவிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய்...

விக்டோரியாவின் கிழக்குப் பகுதிகளில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

எதிர்வரும் நாட்களில் விக்டோரியாவின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (BoM) தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில், குயின்ஸ்லாந்து மற்றும் நியூ...

ஆஸ்திரேலியாவில் மாற்றங்கள் வரவுள்ள HECS – HELP மாணவர் கடன்கள்

எதிர்காலத்தில் HECS-HELP அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய ஆஸ்திரேலிய மத்திய அரசு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார். மூன்றாம் நிலை கல்வி தரநிலைகள் மற்றும்...