அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் பகுதி நேர வேலையில் ஈடுபடுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வரம்பற்ற வேலை நேரம் ஜூலை 1 முதல் 02 வாரங்களுக்கு 40 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள ஊழியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஜூலை 1 ஆம் திகதி முதல் 02 வாரங்களுக்கு 48 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட சில பட்டப் படிப்புகளுக்கான கல்விக் காலத்தின் பின்னர் வழங்கப்பட்ட Temporary Graduate visaவின் (subclass 485) காலத்தை மேலும் 02 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடுமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள துறைகளில் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு உருவாகும்.
கோவிட் பருவத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த காலம் 02 வருடங்களாக நீட்டிக்கப்பட்டது.