Sportsதோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

-

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது. 

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் அவுஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது. 

இருவரும் இணைந்து (ஜடேஜா 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்) 10 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தனர். 115 ரன் இலக்கை இந்திய அணி 4 விக்கெட் இழந்து எடுத்தது. 

இந்தியா 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்டில் 4-வது வெற்றியை பெற்றது. 

அவரது கேப்டன் பொறுப்பில் இந்தியா விளையாடிய முதல் 4 டெஸ்டிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. தோல்வியை தழுவவில்லை. 

இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.

தோனி தலைமையில் முதல் 4 டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்தது. 

தோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...