5 டாலர் நோட்டு தொடர்பாக முடிவெடுக்கும் முன், அது தொடர்பான மத்திய அரசின் முடிவை மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசித்துள்ளது தெரியவந்துள்ளது.
எலிசபெத் மகாராணியின் படத்திற்கு பதிலாக சார்லஸ் மன்னரின் படம் சேர்க்கப்படுமா அல்லது ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை விளக்கும் ஓவியம் பயன்படுத்தப்படுமா என கேட்கப்பட்டுள்ளது.
அங்கு, பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியம் ஒன்றை காண வேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
புதிய 05 டொலர் நோட்டு உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதுவரை, பயன்பாட்டில் உள்ள ராணியின் உருவம் கொண்ட 05 டாலர் நோட்டை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.