15 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 2/3 பேர் அல்லது கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் ஏதேனும் ஒரு மோசடிக்கு பலியாகியுள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இது 55 சதவீதமாக இருந்தது.
பெரும்பாலான மக்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மோசடிகளுக்கு பலியாகியுள்ளனர். இது 47 முதல் 48 சதவிகிதம் ஆகும்.
இது 2020-21 ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகரிப்பு என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசடிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பவர்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இக்காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.