ஜப்பான் கடற்கரையில் மர்ம உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை பார்த்து உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
கடற்கரையில் கிடந்த அந்த மர்ம பந்து இரும்பாலானதும், 1.5 மீட்டர் விட்டமும், துருப்பிடித்தும் இருந்துள்ளது. மேலும், அதன் இருபக்கமும் சிறு இணைப்பு வளையமும் உள்ளது. 200 மீட்டர் மூடப்பட்ட பகுதியான அந்த பந்தில் வெடிக்கும் காரணிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை பாதுகாப்பு உடைகளை அணிந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால், அதன் உள்ளே ஏதுமில்லை எனவும், வெற்றிடமாகத்தான் இருந்தது எனவும் அதனை எக்ஸ்ரே செய்த அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அந்த பந்தை மாலை 4 மணியளவில் அங்கிருந்து அகற்றிவிட்டபோதிலும் அது என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து ஆராய ஜப்பான் இராணுவம் மற்றும் கடற்கரை காவல்படைக்கு புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நன்றி தமிழன்