55 சதவீத ஆஸ்திரேலியர்கள் அடுத்த 6 மாதங்களில் தங்களின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்று கூறியுள்ளனர்.
அடமான தவணை அல்லது மருந்து சீட்டுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தவறவிட நேரிடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
பில்கள் மற்றும் கடன் தவணைகளை செலுத்துவதற்கு, சில நேரங்களில் மருந்து அல்லது அத்தியாவசிய உணவுக்கான செலவுகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் கணித்துள்ளனர்.
பணவீக்க உயர்வு காரணமாக அடமானக் கடன் பிரீமியம் சுமார் 1000 டாலர்கள் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை வாரத்திற்கு சுமார் 200 டாலர்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.