இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தவும், இரவில் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்.
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகளை பயன்படுத்தி எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என தனுஷ்க குணதிலக்கவிடம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு மீண்டும் வரும் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிட்னியின் கிழக்கே ரோஸ் பே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததன் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி சிட்னி ஹோட்டலில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்கவின் விமான அனுமதிப்பத்திரம் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்.