தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 05 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 7வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் இன்று நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கும், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் நடைபெற உள்ளது.