இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான முதல் மிதமான நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.