போக்குவரத்து நெரிசல்களின் போது காற்று மாசுபாடு காரணமாக ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் 11,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் உயிரிழப்புகள் வாகன விபத்தில் இறப்பதை விட 10 மடங்கு அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் காற்று மாசுபாட்டால், ஓராண்டில் 12,200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இதய நோயாலும், 6,840 பேர் சுவாசக் கோளாறுகளாலும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், 66,000க்கும் மேற்பட்டோர் ஆஸ்துமா நோயாளிகளாக மாறுவது தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் ஒரு வருடத்தில் போக்குவரத்து நெரிசல்களின் போது ஏற்படும் காற்று மாசுபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆகும்.