News3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவைசிகிச்சை

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவைசிகிச்சை

-

இஸ்ரேலில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் மண்டை ஓட்டைக் கொண்டு, அப்போதே மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆதாரங்களை சேகரித்த தொல்லியல் துறையினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சி.என்.என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரு நபரின் மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் திசுக்கள் சேதம் அடையாமல் உடைத்தெடுக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

கி.மு 1550 முதல் கி.மு 1450 ஆண்டு காலத்துக்குள் இந்த சகோதரர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. டெல் மெகிடோவில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இவர்களது உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

அதில், மூத்த சகோதரர் வயது 20 முதல் 40க்குள் இருக்கலாம். அவரது மண்டை ஓட்டில் மூளை அறுவைசிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதாவது, மண்டை ஓட்டில் ஒரு சதுரமான எலும்புப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் மிகக் கச்சிதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

ஒரு மனித எலும்புக் கூடு கிடைத்தால், அதன் வாழ்முறை மட்டுமே கண்டுபிடிக்க இயலும். ஆனால் இந்த மனித எலும்பு மூலம், ஒரு மிகப்பெரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...