ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை
என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்