தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து மெல்போர்ன் செல்லும் ஜெட்ஸ்டார் விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விமானத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது.
நேற்று பிற்பகல் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் அவசர மருத்துவ தேவை காரணமாக ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது இந்த போயிங் 787 விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, மீண்டும் புறப்பட முடியாததால், ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றொரு விமானத்தை கொண்டு வர வேண்டியதாயிற்று.
எனினும் அதற்காக கிட்டத்தட்ட 07 மணித்தியாலங்கள் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் சுங்கச்சாவடிகள் செயல்படாததால், விமானத்தில் இருந்து வெளியே வரக்கூட முடியாமல் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பயணிகள் ஓய்வின்றி நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.