டெஸ்லாவின் நிறுவனரும், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் மீண்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.
அவரது நிகர மதிப்பு 277.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவனப் பங்கு மதிப்புகள் சரிவைச் சந்தித்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 274.96 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 02வது இடத்தில் உள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 175.19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 06வது இடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி முறையே 08 மற்றும் 10வது இடங்களிலும் உள்ளனர்.