அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களில் 16 சதவீதத்தினரே நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதாக தெரியவந்துள்ளது.
எனினும், கனடா போன்ற நாடுகளில் இது 27 சதவீதமாக உள்ளது என உள்துறை அமைச்சர் கிளாரி ஓ நீல் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வியை முடித்து நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Employer Sponsor விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வசிப்பிடத்தை வழங்கும் திறன் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
இதற்கிடையில், Student Visa வைத்திருப்பவர் 2 வாரங்களுக்கு வேலை செய்யக்கூடிய மணிநேரத்தை வரும் ஜூலை 1 முதல் 48 ஆக அதிகரிக்க மத்திய அரசும் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.