Newsஅமெரிக்காவில் பனிப்புயல் - பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் – பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

-

உலகில் காலநிலை புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வேகமாக மாறி வருகின்றது. 

பல நாடுகளில் இதன் விளைவாக வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. 

இந்த புயலால் டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. 

இந்த நிலையில், அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தையை புரட்டிப்போட்டுள்ளது.

குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகின்றது.

இதனால் சாலைகள், வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதேபோல் ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...