கடந்த 5 ஆண்டுகளில் அதிக பாஸ்வேர்டுகள் திருடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 50 லட்சம் பேரின் பல்வேறு கணக்குகளில் இருந்து சுமார் 27 மில்லியன் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் 720,000 கூகுள் கணக்குகள், 654,000 மைக்ரோசாப்ட் கணக்குகள் மற்றும் 647,000 ஃபேஸ்புக் கணக்குகள் என தெரியவந்துள்ளது.
ஒரு கணக்கின் தனிப்பட்ட தரவுகளை மற்றொரு தரப்பினருக்கு சராசரியாக விற்பனை செய்வது 06 டாலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சில மிக முக்கியமான தகவல்கள் $6,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.