Newsபேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? - அமெரிக்கா வெளியிட்ட முக்கிய...

பேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? – அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

-

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 

3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகின்றது.

இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. 

இது குறித்து அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் ,‘சீனாவின் உகானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம் ஆய்வறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது அவர், ‘உளவுத்துறையும், அரசின் பிற துறைகளும் இன்னும் அதை (கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை) ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை உறுதியான முடிவு எதுவும் இல்லை. எனவே நான் சொல்வது கடினம். ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே. 

முழு அரசாங்கமும் அந்த உண்மைகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 

அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...