அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து துறைசார்ந்த சாதனங்களில் TikTok செயலியை தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், மத்திய அரசு துறைகளின் சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது. மேலும், TikTok தரவிறக்கப்பட்டுள்ள சாதனங்களில் அதனை நீக்குவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து, வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்