News25 போர் விமானங்களை அனுப்பிய சீனா - தாய்வான் எல்லையில் போர்...

25 போர் விமானங்களை அனுப்பிய சீனா – தாய்வான் எல்லையில் போர் பதற்றம்!

-

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. 

இந்த சூழலில் சமீபகாலமாக தாய்வானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகின்றது. சீனாவுக்கு கடும் கோபத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. 

இதனால் ,தேவை ஏற்பட்டால் தாய்வான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகின்றது. 

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகின்றது. 

இந்த நிலையில் தாய்வானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 25 போர் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் அனுப்பியது. 

இது குறித்து தாய்வான் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 

‘இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன இராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின. 

மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன.

அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தாய்வான் இராணுவம் போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அனுப்பி வைத்தது’ என கூறப்பட்டுள்ளது. 

சீனாவின் இந்த அடாவடியால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது

Latest news

உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடாக ஆஸ்திரேலியா

பெண் விமானிகளின் எண்ணிக்கையின்படி அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.5 வீதமானோர் பெண் விமானிகள் என...

விக்டோரியர்களில் 1/4 பேருக்கு அவசர மருத்துவம் பெற முடியவில்லையா?

விக்டோரியாவின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்லும் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் இருப்பதாக ஒரு புதிய அறிக்கை...

Black Friday மற்றும் Cyber Monday-ல் ஆஸ்திரேலியர்களின் செலவு பற்றிய கணிப்பு

ஆஸ்திரேலிய கடைக்காரர்கள் இந்த ஆண்டு Black Friday மற்றும் Cyber Mondayல் சராசரியாக $600 செலவழிக்க உள்ளனர், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆண்கள் குறைந்தபட்சம் $220 செலவழிப்பார்கள்...

2025-ம் ஆண்டின் விடியலை நேரலையில் கொண்டாட உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

New Year Eve 2025 ஐ நேரடியாகக் கொண்டாடும் உலகின் சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பெயரிடப்பட்டுள்ளது. CN Traveller சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும்...

விக்டோரியர்கள் மருத்துவ கஞ்சாவுடன் வாகனம் ஓட்ட அனுமதி

விக்டோரியா மருத்துவ கஞ்சா தொடர்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மருத்துவ கஞ்சா பயன்படுத்துபவர்களாக இருந்தால், போதைப்பொருளுக்கு நேர்மறை சோதனை செய்யும் ஓட்டுநர்களை தானாகவே தகுதி...

ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்கு சேமிப்பு பற்றி நடத்தப்பட்ட ஆய்வு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...