Newsதினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் அவஸ்தைப்படும்...

தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் அவஸ்தைப்படும் பெண்!

-

பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ஜோனா காக்ஸ் என்ற 38 வயது பெண் கடந்த சில ஆண்டுகளாக அதிக தூக்க பழக்கம் காரணமாக பகல் இரவு என முழுமையாக தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் விழித்திருக்கும் நேரம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவானது என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அவருக்கு சோர்வு நோய் இருப்பதாக கூறப்பட்டது என்றும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அவரது நோய்க்கு இன்னும் மருத்துவம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் முதலில் தான் மிகவும் சோர்வாக இருப்பதை ஜோனா உணர தொடங்கினார். இதனை அடுத்து அவருக்கு எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்தது. கார், கிளப், வேலை செய்யும் இடம் என எங்கும் அவர் தூங்கிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 மணி நேரம் முதல் 22 மணி நேரம் அவர் தூங்குவதை அடுத்து அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர்

சிகிச்சையில் அவருக்கு சாதாரணமான தூக்க கோளாறு என்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இதனை அடுத்து தூக்க கிளினிக் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டார். இருந்தும் அவருக்கு என்ன வகையான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாகவும் தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பதே எனக்கு தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? இன்று என்ன கிழமை என்று கூட எனக்கு தெரியாது என்றும் அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்

அவருக்கு வந்த இந்த அரிய நோய் அவரது குடும்பத்தினர்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...