மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு சில தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கும் அதிகாரத்தை மருந்தக உரிமையாளர்களுக்கு வழங்க ACT மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மாத நடுப்பகுதியில் இருந்து அந்த அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்ற 02 முன்னோடித் திட்டங்கள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளன.
ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சில மருந்தக உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்குவதால் நோயாளிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சில மருந்தக உரிமையாளர்களுக்கு மருந்துகள் பற்றிய முழு அறிவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.