Newsஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

-

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியும் சட்டத்தரணியுமான அலெஸ் பியாலியாட்ஸ்கி. பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார்.

பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரான இவர், கடந்த 1996-ம் ஆண்டு ‘வியாஸ்னா மனித உரிமைகள் மையம்’ என்கிற பெயரில் மனித உரிமை அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

இந்த அமைப்பு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பெலாரசின் ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சேண்டர் லுகாஷென்கோ, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு செய்து ஜனாதிபதியானதாக அலெக்சேண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெலாரசை அதிரவைத்தது.

இந்த போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய அரசு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனிடையே அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது.

அதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத பெலாரஸ் அரசு அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

இந்த நிலையில் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீதான வழக்கை விசாரித்து வந்த பெலாரஸ் நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...