Newsமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல்...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல் விஞ்ஞானி

-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷ்ய அரசாங்கம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. 

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார். 

இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அண்டிரு பெல்ட்டால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

வாக்குவாதத்தின் போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 29 வயதுடைய நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...