Cinema8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை - நடிகை குஷ்பு...

8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை – நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து

-

இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘வி த வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குஷ்பு பேசியதாவது,

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெண்ணா, பையனா என்பதில் பிரச்னை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார். அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...