ஆஸ்திரேலியாவில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு காலத்தை 18 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதற்கான திருத்தங்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.
இது சமீபத்தில் செனட்டில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஒரு பெற்றோருக்கு 20 வார ஊதிய விடுப்பு பெற அனுமதிக்கும்.
கடந்த ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவு 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த 26 வாரங்கள் தாய்க்கு 06 வாரங்கள் – தந்தைக்கு 06 வாரங்கள் மற்றும் மற்ற 14 வாரங்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் பெண்கள் கடமைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வலுவான பங்களிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.