Newsகறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் - வெளியான...

கறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் – வெளியான அதிர்ச்சி சம்பவம்!

-

கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜுவர்கியின், கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல்(32), யாத்கிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுக்காவைச் சேர்ந்த பர்சானா பேகம்(28) என்பவரை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கறுப்பாக இருந்த காரணத்தால் தன் மனைவியை அவ்வப்போது திட்டி தீர்த்துள்ளார். உன் முகத்துக்கு எவ்வளவு பவுடர் போட்டாலும், ஹீரோயினியாக மாட்டாய் எனக் கிண்டல் அடித்துள்ளார். 

ஒருகட்டத்தில் மனைவியை திட்டி சித்ரவதையும் செய்ததோடு, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பர்ஜானா தன் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன், பர்ஜானா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை, பால் வியாபாரி ஒருவர் பர்ஜானா குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் வந்த பர்ஜானாவின் பெற்றோர் குழந்தைகளை மீட்டு உடன் அழைத்துச் சென்றுள்ளனர். காஜா படேல் தனது குடும்பத்தோடு தப்பியோடியுள்ளார்.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அத்துடன், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...