மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் ஊழியர்கள் அடையாள 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு கோரி அவர்கள் நாளை அதிகாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளனர்.
இருப்பினும், இது விமானங்களில் எந்த மாற்றத்தையும் தாமதத்தையும் ஏற்படுத்தாது என்று குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் வலியுறுத்துகிறது.
ஆனால் இன்று விமானங்களுக்கான எரிபொருள் வெளியீடு முற்றாக தடைபடலாம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குவாண்டாஸ் உட்பட விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டும் சூழலில் தங்களின் ஊதியப் பிரச்சனையைத் தீர்க்காமல் இருப்பது சிக்கலுக்குரியது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.