3,000 பசிபிக் தீவுவாசிகளுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்கும் லாட்டரி விசா முறைக்கு மத்திய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லிபரல் கூட்டணியின் நிழல் குடியேற்ற மந்திரி டான் டெஹான், பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக வலியுறுத்துகிறார், ஆனால் லாட்டரி மூலம் விசா வழங்குவதை எதிர்க்கிறார்.
Micronesia, Fiji, Kiribati, Nauru, Palau, Papua New Guinea, the Republic of the Marshall Islands, Samoa, Solomon Islands, Timor-Leste, Tonga, Tuvalu & Vanuatu ஆகிய நாடுகளில் நல்ல ஆங்கிலப் புலமையுடன் 18 முதல் 45 வயது வரை மேலும் வரும் ஜூலை மாதம் முதல் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள 3,000 பேருக்கு நிரந்தர விசா வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக தொழிலாளர் கட்சி அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலியாவிற்கு தற்போது தேவைப்படுவது தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க திறமையான தொழிலாளர்கள் தான் என்றும் அமெரிக்க கிரீன் கார்டு போன்ற லாட்டரிகள் மூலம் நிரந்தர வதிவிடத்தைப் பெறுபவர்கள் அல்ல என்றும் எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.
லிபரல் கட்சியின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, செனட்டில் தொழிலாளர் அரசாங்கத்தால் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது நிச்சயமற்றதாகிவிட்டது.