அவுஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
சந்தை அறிக்கைகளின்படி அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 214 ரூபா 30 சதங்களாக பதிவாகியுள்ளது.
நேற்றைய இறுதியில் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 227 ரூபா 95 சதங்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி வீத பெறுமதிகள் இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்பட உள்ளன.
இலங்கை ரூபாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றைய தினம் மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318 ரூபா 30 சதம் மற்றும் விற்பனை விலை 335 ரூபா 75 சதம்.
எனினும் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் குறைந்துள்ளது.