வளிமண்டலத்தில் உள்ள சிறிய நொதியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வழியைக் கண்டுபிடித்து மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.
இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இது ஒரு மிக முக்கியமான படியாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் துகள்களை மின்சாரமாக மாற்றுவது இங்கு நடைபெறுவதாகவும் மோனாஷ் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவு ஹைட்ரஜன் இருப்பதால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.