கனமழை காரணமாக குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் 200 முதல் 500 மி.மீ மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரக் கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் உடனடியாக ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த நிவாரண திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் நகரங்களில் 70 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களில் மழையற்ற வானிலை நிலவும்.