Newsஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் வழங்குவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் வழங்குவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

-

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 

பக்கிங்ஹாம் அரண்மனையின் ஊடக பேச்சாளர் இது குறித்து தெரிவிக்கையில்,

‘இங்கிலாந்து அரச பட்டங்களுக்கான விதிகளின்படி, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிறக்கும்போதே தானாக இளவரசர் மற்றும் இளவரசி ஆக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அப்போது ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆவர். 

தற்போது அவர்களின் தாத்தா 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியவுடன் அவர்கள் இருவரும் அரச பட்டங்களுக்கு உரிமையை பெற்றனர்’ என கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...